இந்திய வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 300 தனி வீடுகளுக்கு



(க.கிஷாந்தன்)
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கென நிர்மானிக்கப்படவுள்ள 300 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 04.06.2018 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்றன.
இதன் போது மடக்குட்புர பிரதேசத்தில் 250 வீடுகளும், அட்டன் வெளிஓயா பிரதேசத்தில் 50 வீடுகளும் நிர்மானிக்கபடவுள்ளதுடன் இந்த வீடுகள் மண்சரிவு மற்றும் தீ விபத்துக்களில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கும் வீடுகள் இல்லாது வாழ்பவர்களும் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளன.
ஏழு பேர்ச்சஸ் காணியில் நிர்மானிக்கப்படவுள்ள குறித்த வீடுகளுக்கு இந்திய அரசாங்கம் சுமார் 300 மில்லியனும், மலைநாட்:டு புதிய கிராமங்கள் சமூதாய அபிவிருத்தி அமைச்சு 60 மில்லியனும் செலவிடப்படவுள்ளன
இந்திய அரசாங்கம் ஒரு வீட்டுக்காக பத்து லட்சம் ரூபாவும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சு இரண்டு லட்சம் ரூபாவும் செலவிடப்படவுள்ளன.
முற்று முழுவதாக தோட்டத்தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த வீடுகள் அனைத்துக்கும் மின்சாரம், குடிநீர், கழிவறை, குளியலறை வீதிகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளடங்களாக இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த வீடமைப்பு திட்டத்தின் மூலம் மடக்கும்புர மற்றும் வெளிஓயா தோட்டங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானோர் நன்மையடையவுள்ளனர்.
இந்திய அரசாங்கம் பதுளை மொனராகலை, கண்டி, நுவரெலியா உள்ளிட்டு மாவட்டங்களில் இவ்வாறான 14000 வீடுகள் அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பி.திகாம்பரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், இலங்கைக்கான இந்திய கடமை தூதுவர் எச்.ஈ.அரண்டம் பக்சி, கண்டி இந்திய உதவி தூதுவர் திரேந்திரசிங்உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேசசபை, நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.