உலகளவில் மின்னணு கழிவு உற்பத்தியில் முதல் 5 நாடுகள் பட்டியலில், சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனியுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது அசோசெம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜிடிபியை விட அதிகம்
இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில் கடந்த 2016 ல் 44.7 மில்லியன் டன் மின்னணு கழிவுகள், 2021ல் 52.2 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். 2016ல் 20 சதவீத மின்னணு கழிவுகள் மட்டுமே முறையாக சேகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்பட்டுள்ளது. மற்றவை குறித்து உரிய தகவல்கள் இல்லை.
ஆண்டுதோறும், மின்னணு கழிவுகள் உருவாவது அதிகரித்து வருகிறது. கடந்த 2016ல் உருவான மின்னணு கழிவுகளின் மதிப்பு மட்டும் 61.05 பில்லியன் டாலர் ஆகும். இது பல நாடுகளின் ஜிடிபியை விட அதிகம்.
இந்தியாவில்...
இந்தியாவில், ஆண்டுதோறும் 2 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், 4,38,085 டன் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.கடந்த ஆண்டு உருவான மின்னணு கழிவில் 19.8 சதவீதம் மஹாராஷ்டிராவில் உருவானது. இதில், 47,810 டன் கழிவுகள் மட்டும் மறுசுழற்சி செய்யப்பட்டது. தமிழகத்தில் உருவான 13 சதவீதத்தில் 51,427 டன்னும், உ.பி.,யில் உருவான 10. 1 சதவீதத்தில் 86,130 டன்னும், மறுசுழற்சி செய்யப்பட்டன.
மேற்கு வங்கத்தில் 9.8 சதவீதம், டில்லியில்9.5 சதவீதம், கர்நாடகாவில் 8.9 சதவீதம், குஜராத்தில்8.8 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 7.6 சதவீத மின்னணு கழிவுகள் உற்பத்தியாகின. இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஏவை கழிவு
பயன்படுத்தமுடியாத கம்ப்யூட்டர் மானிட்டர்கள், மதர்போர்டுகள், அதன் உதிரி பாகங்கள், மொபைல் போன்கள், சார்ஜர்கள், சிடி, ஹெட் போன்கள் எல்சிடி மற்றும் பிளாஸ்மா டிவிக்கள், ஏசி, குளிர்சாதன பெட்டி ஆகியன மின்னணு கழிவுகளாகும்.

Post a Comment
Post a Comment