(க.கிஷாந்தன்)
அட்டன் கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து 07.06.2018 அன்று மாலை 4.30 மணியளவில் மீபிட்டிகம பகுதியில் தடைப்பட்டன.
07.06.2018 அன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் குறித்த வீதி,யின் போக்குவரத்து முற்றாக சில மணித்தியாலங்கள் தடைப்பட்டன.
அதனைதொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வீதியில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றியதன் பின் குறித்த வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன.
தொடர்ச்சியாக இப்பிரதேசத்திற்கு மழை பெய்து வருவதனால் தொடர்ந்தும் மண்சரிவு நிலவும் அபாயம் காணப்படுகின்றன.
இதேவேளை மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் வீடு ஒன்று காணப்படுவதனால் குறித்த வீடும் அபாயத்திற்குள்ளாகும் நிலை காணப்படுகின்றன.
எனவே இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானமாகவும், மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment