கிழக்கில் சுற்றுலாத்துறை மேம்படுத்த



(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கு சர்வதேச ரீதியில் பல விளையாட்டு நிகழ்ச்சிகளையும்,சுற்றுலா சார்ந்த முதலீட்டு நிகழ்ச்சி திட்டங்களையும் ஊக்குவித்து வருவதாக கிழக்கு மாகாண சுற்றுலா துறை பொது முகாமையாளர் டொக்டர் ஞானேஸ்வரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பாசிக்குடா,மற்றும்  நிலாவெளி போன்ற சுற்றுலா பிரதேசங்களில் கடந்த வருடத்தை  விடவும்  சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சி அடைந்து காணப்படுவதாக பல்கலைக்கழக புள்ளி விபரங்களின் மூலம் தெரியவருகின்றது.

ஆனாலும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் வழிகாட்டலின் கீழ் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டு முதலீட்டா ர்களுடன் இணைந்து சர்வதேச ரீதியில் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் சுற்றுலா துறை பொது முகாமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை  சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தரும்  கடற்கரைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நவீன மயப்படுத்தப்பட்ட ,நீச்சல் தடாகங்களை நிர்மாணிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.