பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை இன்று (02) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களிடம் கையளித்தார்.
பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டுதலில் நடைமுறைப்படுத்தப்படும் எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 80.6 மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டு மைதானம் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment