"எழுச்சிபெறும் பொலன்னறுவை”



பொலன்னறுவை மாவட்டத்தில் சிங்கள அரசர்கள் காலத்திற்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய அபிவிருத்தி திட்டமான "எழுச்சிபெறும் பொலன்னறுவை" திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 180 அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் இன்று பொலன்னறுவையில் இடம்பெற்றது. 

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிபுணர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டனர். 

எழுச்சிபெறும் பொலன்னறுவை திட்டத்தின் கீழ் திவுலங்கடவல மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடிடம் ஜனாதிபதியின் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.