விஷேட நீதிமன்ற கட்டமைப்பை உருவாக்கியதற்கு நன்றி



விஷேட நீதிமன்ற கட்டமைப்பை உருவாக்கிய அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். 

இதனை உருவாக்கியதால் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் தற்போதைய அரசாங்கத்தினால் குறித்த நபர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.