6 கோடி ரூபாய் பெறுமதியான டைட்டன் ரக வலம்புரி சங்கு ஒன்றை இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த பிக்கு ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாத்தறை தேவேந்திரமுனை (தெவுந்தர) விகாரைக்கு அருகில் வைத்து நேற்று கொக்மாதுவை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.39 CM நீளமும், 46 CM அகலமும் கொண்ட இந்த வலம்புரி சங்கின் எடை 1.38 கிலோ கிராம் எனவும், இது இலங்கையில் கிடைத்த ஒரு பொக்கிஷம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதனை ஆறு கோடி ரூபாவுக்கு வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்பனை செய்ய சந்தேகநபர்கள் தயாராக இருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


Post a Comment
Post a Comment