(க.கிஷாந்தன்)
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைத் கொழுத்துவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின விழா 20.03.2019 அன்று புஸ்ஸலாவ இறம்பொடை கலாசார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்த விழா மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளரும், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான வ.சுவர்ணலதா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஊர்வலம் ஆரம்பமாகி இறம்பொடை கலாசார மண்டபத்தை சென்றடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வில் இந்தியாவின் பிரபல பெண் பேச்சாளர் திருமதி பாரதி பாபு மற்றும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளை, திருமதி காஞ்சனா பிரியகாந்த ஆகியோர் விசேட உரைகளை வழங்கினர்.
நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் பிரிவினரும் கட்சியின் தலைவரும் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், ஊவா மாகாண பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால, கட்சியின் பிரதி செயலாளர் அனுசியா சந்திரசேகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது மலையகத்திற்கு பெருமை சேர்த்த கிராமப்புறங்களை சேர்ந்த 15 பெண்களும் பெருந்தோட்டத்துறையை சேர்ந்த 15 பெண்களும் கௌரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வின் போது மகளிரது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

Post a Comment
Post a Comment