(க.கிஷாந்தன்)
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின விழா, 20.03.2019 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
சமநிலை மூலம் சரித்திரம் படைப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா மகளிர் பிரிவு தலைவியும், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான திருமதி. சரஸ்வதி சிவகுரு தலைமையில் நடைபெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம், நுவரெலியா மாநகரசபை பிரதி மேயர் திருமதி. யதர்சனா புத்திரசிகாமணி, மத்திய மாகாண சபை உறுபினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
அட்டன் பிரதான நகரத்தில் இருந்து அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபம் வரை நுவரெலியா மாவட்டத்தை உள்ளடக்கிய மகளிர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்களின் பேரணி ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.


Post a Comment
Post a Comment