உலக கோப்பை கிரிக்கெட்டை வர்ணனை செய்யும் பிரபலங்கள் இவர்கள்தான்


உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் களமிறங்கி பலப்பரிட்சை செய்ய உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான 24 வர்ணனையாளர்களின் பெயர்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.



இதில் இந்தியா சார்பில் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் வர்ணனை செய்வோரின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும்  மைக்கல் கிளார்க், குமார் சங்ககரா (இலங்கை), பிரிட்டன் மெக்கலம் (நியூசிலாந்து), ஷான் பெல்லாக் (தென் ஆப்பரிக்கா), மைக்கல் ஹோல்டிங் (வெஸ்ட் இண்டீஸ்), கிரீம் ஸ்மீத் (தென் ஆப்பரிக்கா), வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா (பாகிஸ்தான்), நாசர் உசைன் (இங்கிலாந்து), சைமன் டோல் (நியூசிலாந்து), மைக்கல் சிலேட்டர் (ஆஸ்திரேலியா), மார்க் நிகோலஸ் (இங்கிலாந்து) உள்ளிட்ட 24 வர்ணனையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.