கூகுளில் தேடி சிறையில் முடிந்த இளைஞரின் கடத்தல் படலம்




டைம்ஸ் ஆஃப் இந்தியா - 
குழந்தையை கடத்துவது எப்படி? சிறையில் முடிந்த பட்டதாரி இளைஞர் கடத்தல் திட்டம்
திரைப்படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் சினிமா பாணியில் திட்டம் தீட்டி 3 வயது குழந்தையை கடத்திய நபரை சென்னை போலீஸார் 8 மணி நேரத்தில் கண்டுபிடித்து குழந்தையையும் மீட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் 33 வயதான பட்டதாரி முகமத் கலிமுல்லா. இவருக்கு சினிமா தயாரிக்க வேண்டும் என்பது நீண்டகால ஆசை. அதற்காக, தன்னுடைய தோழி அம்பிகாவின் உதவியை நாடியுள்ளார். அம்பிகா வேலை செய்யும் வீட்டில் வளரும் 3 வயது குழந்தையை கடத்த திட்டமிட்டு, செயல்படுத்தியுள்ளனர். குழந்தையின் பெற்றோரிடம் 60 லட்ச ரூபாய் பிணை தொகை கேட்டுள்ளனர்.
இதற்காக, கலிமுல்லா கடந்த ஒருவாரத்துக்கு மேலாக பல்வேறு இணைய தளங்களில், குழந்தை கடத்துவது எப்படி என்று ஆராய்ந்துள்ளார். ஆனால், குழந்தை கடத்தப்பட்டு சிலமணி நேரங்களிலேயே சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர். 8 மணி நேரத்தில் குழந்தையை மீட்டதற்காக குழந்தையின் பெற்றோர் போலீஸாருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.


Presentational grey line