கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  நிந்தவூர் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (19) இரவு  இடம் பெற்றது.

 கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்   இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச அபிவிருத்திகள்  குறைபாடுகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் வாரங்களில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களின் வருகை தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது.

இக்கூட்டத்தில் கடந்த காலங்களில் பல்வேறு கட்சிகளில் முக்கியஸ்தர்களாக செயற்பட்ட பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்.


இந்நிகழ்வானது நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமை தாங்கியதுடன்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தவிசாளரும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். இஸ்மாயில்   அஷ்ஷேக் ஹனிபா மதனி உள்ளிட்ட  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள்  நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் பொத்துவில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பகுதிகளிலும் காலை முதல் மாலை வரை மக்கள் சந்திப்புக்கள்  மேற்கொள்ளப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


Advertisement