நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 

இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. 

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சி செயற்படும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி கூறினார்.


--- Advertisment ---