பிராந்திய ஊடகவியலாளர் வாமதேவன் காலமானார்



Thinakaran,
மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பி வாமதேவன் (ஓய்வுநிலை கிராமசேவகர், சமாதான நீதவானும்) நேற்று 922) வெள்ளிக்கிழமை தனது 69ஆவது வயதில் காலமானார்.  

மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு சூர்யா லேனை வசிப்பிடமாகவும் கொண்டவர். அன்னாரின் பூதவுடல் மட்டக்களப்பு சூரியா லேனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள்  


நாளை ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் இடம்பெறும் அமரர் வாமதேவன் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் 30 வருடம் கிராமசேவகராக இருந்து சேவை புரிந்ததுடன் அக்காலத்தில் தினமணி, சிந்தாமணி, ஈழநாடு, தினமுரசு, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளுக்கு எழுத்தாளராகவும் தமது இறுதிக் காலம்வரை வீரகேசரி பத்திரிகையின் சித்தாண்டி பிரதேச நிருபராகவும் கடமையாற்றியவர்.இவர் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தல வரலாறுகளை பத்திரிகை வாயிலாக உலகறியச் செய்த பெருந்தகையாவார். 2015 ஆம் ஆண்டு இந்து கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சிடமிருந்து கலாபூஷண விருதினையும் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.