பொது தேர்தலில் வெற்றிப்பெற தலைமைத்துவம் வழங்குவேன்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சியை வெற்றிப்பெற செய்வதற்கான தலைமைத்துவத்தை தான் ஏற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னணி அடைந்த பின்னடைவிற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நன்றி தெரிவிக்க நாடு முழுவதும் பயணிக்கவுள்ளேன். ஜனாதிபதி தேர்தலில் அடைந்த பின்னடைவிற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன். பொது தேர்தலில் வெற்றிப்பெற தலைமைத்துவம் வழங்குவேன்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவ்வளவு கரிசனை ஏற்படவில்லை. சஜித்தை ஓய்வு பெறுமாறு கூறினால் அதற்கும் தயார். சஜித்திற்கு வெட்கமும், அச்சமும் உண்டு´


Advertisement