நீர்த்தேக்கங்களினது நீர்மட்டம் அதகரிப்பு

நாட்டின் அனைத்து நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் 75 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார். 
இதன்காரணமாக, எதிர்வரும் காலங்களில் பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரை விநியோகிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையையடுத்து இவ்வாறு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 
அம்பாறை, மொனராகலை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தளவே காணப்படுகிறது. Advertisement