மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம்


பிரேசிலில் நிறுவப்பட்டுள்ள 230 அடி உயரமான மிதக்கும் கிறிஸ்துமஸ் மரத்திற்கு, வான வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் ஒளியூட்டப்பட்டுள்ளது.
ரியொடி ஜெனிரோ பகுதியில் உள்ள ரோட்ரிகொ டி ப்ரெய்டாஸ் லகூன் என்ற பிரபலமான சுற்றுலா பகுதியில், உலோகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மரமானது தண்ணீருக்கடியில் இருந்து 11 தளங்களை ஏற்படுத்தி அதன்மீது  நிறுவப்பட்டுள்ளது.

9 லட்சம் எல்.இ.டி விளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மரமானது, 8 வெவ்வேறு வகையிலான வண்ணங்களில் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2020 ஜனவரி 6 வரை ஒவ்வொரு இரவும் இந்த கிறிஸ்துமஸ் மரம் ஒளிரவிடப்படும். இது ரியோ டி ஜெனிரோவின் மூன்றாவது பெரிய கலாச்சார நிகழ்வாகும்.230 அடி உயர மரம் ஒளிரவிடப்பட்டதையும் , அதைத் தொடர்ந்து நடந்த ஏழு நிமிட பட்டாசு நிகழ்ச்சியையும் காண ஆயிரக்கணக்கானோர் கூடினர்.