உயர் தரத்தில் தோற்றால், எதிர்காலம் இருண்டு விடுவதில்லை



உயர்தரத்தில் கல்வி கற்கும் அனைவரினதும் எண்ணம் பல்கலைக்கழகம் செல்வதாகும். ஆனால் சிறிய தொகையினருக்கு மட்டுமே பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பு கிடைக்கின்றது. அதனால் அதிகமானோர் நம்பிக்கை இழக்கின்றார்கள். பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்கள் தங்களுடைய எதிர்காலம் முற்றாக இருள் சூழ்ந்தது என எண்ணுகின்றார்கள்.
அவை அனைத்தும் வேலைவாய்ப்பு சந்தையை நோக்காகக் கொண்டு உருவான தொழில்களாகும். ஆனால் இதில் பிரவேசிப்பதற்கு குறையாக இருப்பது அறியாமையாகும். அதற்குத் தீர்வினை காணுமுகமாக கல்வியமைச்சும் உயர் கல்வியமைச்சும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சும் பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து சிறந்த பணியொன்றை ஆற்றின.
“நாம் இந்தத் திட்டத்தை கடந்த உயர்தரப் பரீட்சையின் போதே ஆரம்பித்தோம். அது வெற்றி பெற்றதனால் இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் போது பரீட்சைத் திணைக்கள வினாப் பத்திர பொதிகளுடன் கையேட்டையும் விநியோகித்தோம். உயர்தரத்துக்கு தகுதி பெறாது விட்டாலும், தொழில்நுட்பக் கல்வியினூடாக கல்வியைப் பெற சந்தர்ப்பம் வழங்குவது அதன் நோக்கமாகும். சாதாரண தரத்திலிருந்து NVQ மட்டம் வரை சென்று பட்டம் பெறும் வாய்ப்பும் உண்டு. இன்று க. பொ. த சாதாரண தரத்தில் சித்தியெய்தாதவர்கள் NVQ 3 மட்டம் வரை தொழில் தொடர்பான பாடத்தை பாடசாலையில் கற்கும் வாய்ப்புண்டு.
கலைப் படைப்புக்கள் மற்றும் ஊடகக் கல்வி, மோட்டர் வாகன பழுதுபார்த்தல், கட்டடங்கள் அமைத்தல், மின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு நிதி மற்றும் வங்கி முகாமைத்துவம், உணவு தொழில்நுட்பம், மாணிக்கக்கல்,தங்க ஆபரணங்கள், உணவு விடுதி,உல்லாசப் பயணத்துறை, காரியாலய முகாமைத்துவம், தோல் மற்றும் சப்பாத்து, ஆடையணிகள், மரங்களிலான கைவினைப் பொருட்கள், குளிர்சாதனப் பெட்டி மற்றும் குளிரூட்டி, கனரக வாகன சாரதி என்பனவே திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் உள்ள பாடநெறிகளில் ஒரு பகுதியாகும்.
திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சின் கீழுள்ள 9 நிறுவனங்களுடன் இணைந்து க. பொ. த உயர்தரத்தில் தோல்வியுற்ற மாணவர்களுக்காக தொழிற் பயிற்சி பாடநெறிகளை நடத்துவது குறித்து அநேகமான மாணவர்கள் அறிய மாட்டார்கள். கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சியளிக்கும் திணைக்களம் (DTET) தொலைபேசி இலக்கங்கள் 0112348897 அல்லது 0112348893 மூலமாகவோ WWW.dtet.gov.lk மூலமோ தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை தொலைபேசி இலக்கம் 0117270270 மூலமாகவே WWW.vtasl.gov.lk மூலமாகவோ தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தேசிய கற்கைகள் முகாமைத்துவ நிறுவனம் தொலைபேசி இலக்கங்கள் 0112692165 மூலமாகவோ அல்லது WWW.nibm.lk மூலமோ தொடர்பு கொள்ளலாம்.
இலங்கை அச்சக நிறுவனம் மூலமும் பல கற்கைநெறிகள் உள்ளன. அது தொடர்பான தகவல்களுக்கு WWW.cgtti.gov.lk மற்றும் 0112605625 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இதைத் தவிர (NSBM) தொலைபேசி இலக்கம் 011544500 அல்லது WWW.nsbm.lk மூலமாக தொடர்பு கொள்ளலாம். தொழில்நுட்ப பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழக தொலைபேசி இலக்கம் 0112630700 ஊடாகவும் அல்லது WWW.UniVotec.ac.lk இணையதளம் மூலமும் இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் மற்றும் பிரதேச மத்திய நிலையங்களின் தொலைபேசி இலக்கம் 01124346990 அல்லது WWW.Ocu.gov.lk இலங்கை அச்சக நிறுவன தொலைபேசி இலக்கம் 0112686162 அல்லது WWW.Sliop.edu.lk இணைய முகவரி மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது உயர் தரத்தில் கல்வி கற்க சந்தர்ப்பம் கிடைக்காத உங்களுக்கு கவலைப்படவோ எதிர்காலத்தை இருமட்டாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உங்கள் எதிர்காலத்துக்காக செய்வதற்கு அநேகமானவைகள் உண்டு. மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் (TVEC) WWW.tvec.gov.lk இணையததளம் மூலமும் தகவல்களைப் பெறலாம்.
அமில மலவிசூரிய