புதிய மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு 16 ஆம் திகதி

தரம் - ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பிரபல பாடசாலை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெட்டுப் புள்ளிக்கு அமைவாக ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை அனுமதிப்பது தொடர்பிலான கடிதங்கள் அதிபர்களுக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக தமது பிள்ளைகளுக்கு இன்னும் பாடசாலைகள் கிடைக்காதவிடத்து இது தொடர்பில் பெற்றோர் முறையிடலாம் என மேலதிக செயலாளர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 6 ஆம் திகதியில் இருந்து 17ஆம் திகதி வரை முறைப்பாடுகள் ஏற்றக்கொள்ளப்படும். எந்தவொரு மாணவருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின், அவர்களுக்கு பாடசாலைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம.எம்.ரட்நாயக்க கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)


Advertisement