இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு - 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணியினர் இன்று காலை இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளனர்.
அதன்படி இலங்கை அணிக் குழாமினர் இன்று காலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டனர்.
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்காக 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.
பல்வேறு காயங்கள், போதிய உடற்தகுதியின்மை காரணமாக விலகியிருந்த சகலதுறை ஆட்டக்காரரும் முன்னாள் தலைவருமான அஞ்சலோ மெத்தியூஸ் 18 மாதங்களுக்குப் பிறகு இருபதுக்கு-20 அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment