துப்பாக்கிச் சூடு - மகள் பலி

வரக்காபொல, தொரவக்க பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாய் மற்றும் மகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 22 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் தாய் பலத்த காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (14) அதிகாலை 5.30 மணி அளவில் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காதல் விவகாரம் ஒன்றிற்காகவே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Advertisement