ரஞ்சனை ஏவியவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஏவிய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அவர்கள் அவ்வாறே தேர்தல் காலத்தில் சில நீதிபதிகளை அழைத்து கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைய செய்ய முயன்றதாகவும் கூறினார்.

இந்த ஊடக சந்திப்பில் 19 ஆவது திருத்தச் சட்டம் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கருத்து தெரிவித்தார்.Advertisement