.ரஞ்சனிடம் உரையாடிய நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பெறுமாறு பணிப்புரை

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் தொலைப்பேசி உரையாடல்களில் ஈடுபட்ட நீதிபதிகளிடம் தாமதமின்றி வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

(பின்னிணைப்பு - 7.58 pm) இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி ஆஷா கஹவத்தவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவினருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Advertisement