மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு(க.கிஷாந்தன்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 16.01.2020 அன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக   பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த காளிஸ்வரன் நந்தகுமார் வயது 24 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், குறித்த சடலமானது இரு தினங்களுக்கு முன் நீர்தேக்கத்தில் விழுந்திருக்க கூடுமென சந்தேகிப்பதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரைணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement