மக்கள் வாழ்க்கையை பாதிக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது


மக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் கிராமங்களைத் தனிமைப்படுத்தல் ஆகியன  அரச உயர் மட்டத்திலேயே  தீர்மானிக்கப்படுகின்றது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், "கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வு செய்து ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல் என்பவை அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது.

ஏதேனும் ஒரு பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டத்தில் மாற்றம் செய்ய தேவையான தகவல்கள் இருப்பின் அந்த அனைத்து தகவல்களையும் கோரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது என தெரிவிக்கப்படுகின்றது" என குறிப்பிடப்பட்டுள்ளது.