நுவரெலியாவில் மதுபானசாலைகளின் எண்ணிக்கை 234,ஆனால், அரச மருந்தகம்?


#Reports:Sivalingam Sivakumaran.
நுவரெலியா மாவட்டத்தில் உரிமம் பெற்ற மதுபானசாலைகளின் எண்ணிக்கை 234 ஆகும். (தகவல் அறியும் சட்டத்தின் மூலம் என்னால் 2019 ஆண்டு பெறப்பட்டது) ஆனால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஒசுசல மருந்தகம் ஒரு பெட்டிக்கடை அளவுக்குக் கூட இம்மாவட்டத்தில் இல்லை.

கண்டி, பதுளை ,பண்டாரவளை ,இரத்தினபுரியில் கூட ஒசுசல இருக்கின்றன. மக்களுக்குத் தேவையான எவற்றை தமது பிரதேசத்துக்கு அதிகம் கொண்டு வர வேண்டும் என எமது அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கின்றது.
அதே போன்று அரசாங்கத்தின் சதோச விற்பனை நிலையங்கள் தோட்டங்களை அண்டிய பகுதிகளில் இல்லவே இல்லை. தலவாக்கலையிலிருந்து டயகம வரை சதொச விற்பனை நிலையம் ஒன்று கூட இல்லை. இப்பிரதேச தோட்டங்களில் சுமார் 60 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தலவாக்கலையில் உள்ள சதொசவுக்கே பொருட்கள் வாங்க வர வேண்டும். அதுவும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் அவர்கள் பட்ட கடினம் சொல்லில் மாளாது.
இக் காலத்தில் இம்மக்கள் படும் கடினத்தை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
கைத்தொழில் அமைச்சின் முயற்சியின் காரணமாக மன்றாசி நகரத்தில் 15 ஆம் திகதி ஒரு சதோச விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
குறைந்த நியாயமான விலையில் மருந்துகளையும் அத்தியாவசிய பொருட்களையும் இந்த மாவட்ட மக்கள் பெற்றுக்கொள்ளத்தக்க ஒசுசல மருந்தகங்களையும் சதோச விற்பனை நிலையங்களையும் அதிகரிக்க வேண்டியது யாருடைய பொறுப்பு?