அக்கரைப்பற்று மன்றினால், வன் புணர்வு சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல்



Rep/Jamaldeen.
அட்டாளைச்சேனை சம்பு நகர் பிரதேசத்தில் பெண் ஒருவர் மீது நேற்று அதிகாலை பாலியல் வல்லுறவு இடம் பெற்றதாக முறைப்பாடொன்று முன் வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டுன் தொடர்புற்ற சந்தேகத்தில் நேற்றைய தினம்  நால்வர் அக்கரைப்பற்றுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த சந்தேக நபர்களை,அக்கரைப்பற்றுப் பொலிசார் அக்கரைப்பற்று,கௌரவ நீதிமன்ற நீதிபதி ஜனாப் ஹம்சா முன்பாக ஆஜர் செய்திருந்ததுடன் , குறித்த குற்றமானது கூட்டுப் பாலியல் வண்புணர்வு என்பதுடன்,பிணை வழங்குவதற்கான தமது ஆட்சேபனைகளையும் முன்வைத்திருந்தனர்.குறிப்பிட்ட சந்தேக நபர்பளை மே மாதம் 14ம் திகதி வரை விளக்க மறியலி்ல், வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ஜனாப் ஹம்சா உத்தரவிட்டார்.