ஆடுகளம் பிளாட்-ஆக இருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி காப்பாற்ற முடியும்?

டி20 கிரிக்கெட் பிரபலம் அடைந்த பின்னர் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் ஆதரவு குறைந்து வருகிறது. ஒரு கிரிக்கெட் வீரரின் திறமையை தெரிந்து கொள்ள டெஸ்ட் போட்டிதான் சிறந்தது என கூறப்பட்டு வந்தாலும் ரசிகர்கள் ஐந்து நாட்கள் மைதானத்திற்கு வருவதை விரும்பவில்லை.

டி20 கிரிக்கெட் போட்டி மூன்று மணி நேரத்திற்குள் முடிந்து விடுவதால் ரசிகர்கள் வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் போட்டிக்கு வரவேண்டிய அவசியமில்லை. மாலை வேலை முடிந்து போட்டிக்கு வந்தால் போதுமானது.

கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் குறைவதால் ஐசிசி-க்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை. மைதானங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆனால் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Advertisement