இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்ற மக்கள்


கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதை சுட்டிக்காட்டும் வகையில், இன்று (ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு துவங்கி 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைக்கும்படி இந்தியப் பிரதமர் மோதி கோரிக்கை விடுத்திருந்ததை ஏற்ற மக்கள் அதை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகின்றனர்.
வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்த மக்கள், பிறகு அகல் விளக்குகளையும், டார்ச் விளக்குகளையும் ஒளிர செய்து வருகின்றனர்.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement