சுழற்ச்சி முறையில், சிகை அலங்காரம்

Sugirthakumar Vijayarajah.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிகையலங்கரிப்பாளர்கள் பிரதேச எல்லைக்குள் சுழற்சி முறையில் தொழில் புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பிரதேச எல்லை தாண்டி விவசாய நிலங்களுக்கு செல்பவர்கள் பெரும்பாக உத்தியோகத்தர் ஊடாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அனுமதியை பெறவேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச மட்ட கொரோனா செயலணியின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர் க.பேரின்பராசா ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் உள்ளிட்ட விவசாய பெரும்பாக உத்தியோகத்தர் மற்றும் பொலிசார் தமிழ் முஸ்லிம் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


Advertisement