அக்கரைப்பற்று மசூர் ஹாஜி,வீடு திரும்பினார்

#IRSAATH.
அக்கரைப்பற்று பெரிய பள்ளியடி -K.T.19 இனைச் சேர்ந்த மசூர் ஹாஜியார் வெலிக்கந்த தனிமைப்படுத்தல நிலையத்தில் இருந்து இன்று மாலை 4.45 மணியளிவில், வீடு திரும்பினார்.

இவர் கொரொனா தொற்றுக்கு ஆட்பட்டவர் என்ற சந்தேகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சுகாதரப் பிரிவால் அழைத்துச் செல்லப்பட்டார். இவருக்கு  குறித்த நோய்க்குரிய எந்த வித அறிகுறியும் தென்படவில்லை.

இறுதியாக மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசோதனைகளில், நெகரிவ் குறி காட்டப்பட்டிருந்தது.இதேவேளை தற்போது தனிமைப் படுத்தல் நிலையத்திலுள்ள அவரது மனைவி நாளைய தினம் வீடு திரும்பும் சாத்தியம் காணப்படுகின்றது.


அல் ஹாஜ் மசுர், கடந்த இரண்டு மாதங்களின் முன்பு கத்தார் சென்றிருந்தார என்பதும் குறிப்பிடத்தக்கது.