சட்டத்தரணியின் தேவைப்படுத்தல் கடிதம் #EsternYouths முகநுால் நேரலைக்கு எதிராக

#SM.இர்சாத்.
அக்கரைப்பற்றில், கடந்த புதன் கிழமை மாலை, கொரொனா தொற்றுக்கு ஆட்பட்டவராகச் சந்தேகிக்கப் படும் ஒருவரை. கொரொனா தொற்றாளர் என வெளிப்படுத்தி அவரது இல்லத்தின் அருகில் இருந்து முக நுாலில் நேரலையாக, அஞ்சல் செய்யப்பட்டது. 

இது குறித்த தொற்றுக்கு ஆட்பட்டவராகச் சந்தேகிக்கப்படும்,நபர் பற்றிய விபரங்களும், அவரது குடும்ப உறவினர்கள்  பற்றியும், அவர்கள்  ஏனைய இடங்களுக்கும் இதனைப் பரப்பி வருவதாகவும் #EasternYouth முக நுால் நேரலையில் காட்சிமயப் படுத்தப் பட்டிருந்தது.க

இவ்வாறு  வன்ம நோக்கோடு -முகநுால் நேரலையில் தெரிவிக்கபட்டதால், தன்னையும், தமது குடும்பத்தாரையும், தமது குடும்பத்தை அண்டி வாழ்வோரையும்  மன உளைச்சலுக்கு ஆட்படுத்தியுள்ளதாவும், இதனால் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக, ரூபா ஐம்பது இலட்சத்தை தருமாறு கோரி பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவரால் தேவைப்படுத்தல் கடிதம் ஒன்று தமது சட்டத்தரணி எம்.எம்.ரத்தீப் அஹமட் மூலமாக இன்று மாலை அனுப்பபட்டுள்ளது.

குறித்த கோரிக்கை கடிதமானது, ஆதம்பாவா நுாறுல்லாஹ் உரிமையாளர்  #EasternYouths  என்பவருக்கு இன்று மாலை சட்டத்தரணி எம்.எம்.ரத்தீப் அஹமட்  அவர்களால் மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளது.


Advertisement