கோட்டா அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டுள்ளது


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அரசியல் ரீதியிலான பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சி உறுப்பினர்களிற்கு எதிரான அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கைகளை விரைவில் முடிவிற்கு கொண்டுவருவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன கைதுசெய்யப்பட்டமை எதிர்கட்சியினருக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் சுகாதார துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ள நபர் ராஜித சேனராட்ன. எனினும் அரசாங்கம் தனது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு அவரை பலியாக்கியுள்ளது. பக்கச்சார்பற்ற சுயாதீனமான நீதித்துறை நியாயமான தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கின்றேன்.” என்றும் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளார்.