தவறி வீழ்ந்த ஜோடி

லக்கல சேரஎல்ல நீர்வீழ்ச்சியில் திருமண படப்பிடிப்பின் போது தவறி வீழ்ந்த யுவதி காப்பாற்றப்பட்டுள்ளதுடன் இளைஞனை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள திருமணத்திற்கு முன்னேற்பாடாக புகைப்படம் எடுப்பதற்கு நேற்று லக்கல செரஎல்ல நீர்வீழ்ச்சிக்கு இவர்கள் இருவரும் சென்றிருந்தனர்.

புகைப்படம் எடுக்கும் போது இவர்கள் இருவரும் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்துள்ளனர்.

அருகிலிருந்தவர்கள் யுவதியை காப்பாற்றியுள்ளதுடன் இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.


Advertisement