புனர்நிர்மாணம் செய்யும் பணிகள்

அதிமேதகு ஜனாதிபதியின் 'சௌபாகிய தேக்ம' கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் பாதைகளைப்  புனர்நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டத்திற்கு 
அமைய, குருநாகல் மாவட்டத்தில் பாரியளவில் பழுதடைந்துள்ள பாதைகளைப் புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்திற்கு நடுவே செல்லும் "ரடமெத" வீதியின் புனர்நிர்மாணப் பணிகள் வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாகாண சபை நிறுவனங்களின் அதிகாரிகள்,  ஊர்மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

- ஊடகப் பிரிவு - 


Advertisement