ஏ.வி.எம். நிறுவுனர் பிறந்த தினம்


சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், 1907 ஜூலை, 28ம் தேதி, ஆவிச்சி செட்டியாருக்கு மகனாக பிறந்தவர், ஏ.வி.மெய்யப்ப செட்டியார். 1935ல், திரைப்பட தயாரிப்பில் இறங்கியவர், ஆரம்பத்தில் சில தோல்விகளை சந்தித்து, பின் வெற்றி கண்டார்.


நண்பர்களுடன் இணைந்து, 'பிரகதி ஸ்டுடியோ' எனும் நிறுவனத்தை துவக்கி, சபாபதி, ஸ்ரீவள்ளி போன்ற படங்களை தயாரித்தார். பின், 1945ம் ஆண்டு, ஏ.வி.எம்., நிறுவனத்தைத் துவக்கி, வாழ்க்கை, பராசக்தி, அன்பே வா உள்ளிட்ட படங்களை தயாரித்து, தமிழில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து, வெற்றி கண்டார். தமிழ்த் திரையுலகில், 75 ஆண்டுகளாக, ஏ.வி.எம்., நிறுவனம் நிலைத்து நிற்பதற்கு, அவர் அமைத்துக் கொடுத்த அடித்தளம் தான், காரணம். 1979 ஆக., 12ம் தேதி காலமானார்.

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பிறந்த தினம் இன்று!