நிக்கவெரட்டிய, கொபேஹென பிரதேசங்களில் மீள் வாக்களிப்பு நடத்துமாறு கோரிக்கை

குருணாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய, கொபேஹென போன்ற இடங்களில் மீள வாக்களிப்பு நடத்துமாறு #SJB கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்நு கோரிக்கை விடுத்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ச 100 இற்கும் மேற்பட்ட ஆதவராளர்களுடன் மேற் குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றதாகவும், இதனால், அங்கு சுதந்திரமான வாக்களிப்பு இடம்பெறவில்லையென்றும், குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக ஆதரவாளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்கு வேட்பாளர்களுடன் செல்வதானது, ஏனைய வேட்பாளர்களுக்கு குந்தகமாக அமையும் என்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement