மகிழ்ச்சிப் பிரவாகம்


 tp.Rfph;jFkhh;          

  இரு தடவைகள் ஜனாதிபதியாகவும் நான்கு முறை பிரதமராகவும் நாட்டின் 25ஆவது பிரதமராகவும் பதவியேற்கும் மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் சத்தியபிரமாணம் செய்து பதவியேற்றதை தொடர்ந்து அம்பாரை மாவட்ட மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பதவியேற்பை கொண்டாடும் வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகளை எற்பாடு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைவாக அம்பாரை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் ஜ.எச்.எம்.வஹாப் தலைமையில் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி பிரதேசத்தில் துவா பிரார்த்தனையும் பாற்கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

 துவா பிரார்த்தனையை மௌலவி ஏ.ஜி.பௌசுல் ரகுமான் நடாத்தியதுடன் அங்கு ஒன்று கூடிய கட்சி ஆதரவாளர்கள் பாற்கஞ்சியை வீதி வழியாக சென்றவர்களுக்கும் அங்கு குழுமியிருந்தவர்களுக்கும் வழங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து அம்பாரை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் ஜ.எச்.எம்.வஹாப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் வரலாற்று வெற்றியை பெற்று நாட்டின் பிரதமராக பதவியேற்றிருக்கும்; மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி அமைச்சரவை உள்ளிட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் நாட்டில் உள்ள சகல மக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழும் சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.Advertisement