கொடுங்கனவு `வாசிம் அக்ரம்’; `கடினம்’ ஜாகீர்கான்; முரளிதரன் ஸ்பெஷல்! -


 

`பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமை எதிர்கொண்டது கொடுங்கனவு போல இருந்தது. இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர்கான் பந்துவீச்சை பலமுறை எதிர்கொண்டுள்ளேன்"

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான குமார் சங்ககாரா மிகப்பெரிய சாதனைகளுடன் ஓய்வுப் பெற்றார். சிறந்த பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் விளையாடிய சங்ககாரா, உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். ஒருநாள் போட்டிகளில் சங்ககாரா 14,234 ரன்கள் எடுத்து சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். 2000-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சுமார் 15 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி சங்ககாரா, தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக உள்ளார்.ஜாகீர் கான்

ஜாகீர் கான்
Twitter|@RSWorldSeries

குமார் சங்ககாரா சமீபத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது, ரசிகர் ஒருவர் சங்ககாராவிடம், `நீங்கள் எதிர்கொண்ட மிகவும் கடினமான பவுலர்கள் யார்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த சங்ககாரா, ``பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமை எதிர்கொண்டது கொடுங்கனவு போல இருந்தது. இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர்கான் பந்துவீச்சை பலமுறை எதிர்கொண்டுள்ளேன். அதுவும் மிகக்கடினமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன்

விக்கெட் கீப்பராக இருந்தபோது மிகவும் கடினமாக இருந்த பவுலர் குறித்தும் ரசிகர்கள் சங்ககாராவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``ஸ்டெம்புக்கு பின்னால் இருந்தபடி முத்தையா முரளிதரனின் பந்து வீச்சை கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது. அவரது பந்துவீச்சின் போது பந்துகள் திரும்பும் முறை மற்றும் நிலவும் காலநிலை ஆகியவை நமது மனம் மற்றும் உடல் பலத்தை சோதனை செய்யும் ஒன்றாக இருக்கும். எனவே, அவர்தான் நம்பர் ஒன்" என்று சங்ககாரா தெரிவித்திருக்கிறார்.