புதிய கட்சிகளின் ஆதிக்கமும், ரணில் விக்ரமசிங்கவின் தோல்வியும்

 

#RA.Pirasaath.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் புதிய கட்சிகள் இரண்டு அதிகாரத்தை கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த நிலையில், இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ஆட்சியை மாறி மாறி அமைத்த பிரதான இரண்டு கட்சிகளும் பாரிய பின்னடைவை இந்த முறை தேர்தலில் முதன் முறையாக சந்தித்துள்ளன.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியே பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய சவால்களை சந்தித்து வந்திருந்தது.

இலங்கையில் வரலாற்று வெற்றியை தனதாக்கியது ராஜபக்ஷ சகோதரர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி
இலங்கை தேர்தல்: பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
குறிப்பாக இலங்கையின் தற்போது அரசியலமைப்பு கூட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்திலேயே கொண்டு வரப்பட்டிருந்தது.

இவ்வாறு இலங்கையின் மிகவும் பழைமையான கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சி யாரும் எதிர்பாராத விதமாக பாரிய தோல்வியை இந்த முறை தேர்தலில் சந்தித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க தோல்வி
இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கிய பாத்திரமாகவும், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகவும் விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க யாரும் எதிர்பாராத அளவு தோல்வியை இந்த முறை சந்தித்துள்ளார்.

தனது நாடாளுமன்ற வாழ்க்கையில் முதன் முறையாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ரணில் விக்ரமசிங்க தேர்தலின் ஊடாக இந்த முறை இழந்துள்ளார்.

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 7 ஆகஸ்ட், 2020, பிற்பகல் 2:05 IST

பியகம தொகுதியிலிருந்து 1977ஆம் ஆண்டு முதன் முறையாக ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் தனது அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் கண்ட ரணில் விக்ரமசிங்க 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.

ரணில் விக்ரமசிங்க மூன்று தடவைகள் பிரதமராகவும் பதவி வகித்திருந்தார்.

இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டுள்ளார்.

இலங்கையில் புதிய கட்சிகளின் ஆதிக்கமும், ரணில் விக்ரமசிங்கவின் தோல்வியும்பட மூலாதாரம்,GETTY IMAGES
அதுமட்டுமின்றி, இலங்கை அரசியல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றவர் என்ற சாதனையையும் ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தியிருந்தார்.

1977ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஒரு தடவை கூட தோல்வியை சந்திக்காத ரணில் விக்ரமசிங்க, 9ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பாரிய தோல்வியை சந்தித்துள்ளார்.

இலங்கையில் யாருமே எதிர்பாராத விதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றை தவிர்த்த புதிய இரண்டு கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் பெரும்பான்மையுடன் பிரவேசித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளாக இந்த முறையே செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement