நீர்கொழும்பு கடலில், மாயமான இளைஞர்களில் இருவர் தலவாக்கலையைச் சேர்ந்தவர்கள்


 (க.கிஷாந்தன்)

 

நேற்று (03.10.2020) மாலை நீர்கொழும்பு கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன இளைஞர்களில் இருவர் தலவாக்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஸ்டேலின் தோட்டத்தைச் சேர்ந்த முத்துகுமார் சிந்துஜன் வயது (24) மனோகரன் சசிகுமார் வயது (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

குறித்த இளைஞர்கள் கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று (03) மாலை குளிப்பதற்காக தனது ஏழு நண்பர்களுடன் நீர்கொழும்பு கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தீடீரென அலைக்கு சிக்குண்டு கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போய்யுள்ளனர்.

 

காணமல் போன இளைஞர்கள் மூவரில் மற்றுமொருவர் பதுளை நமுனுகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

 

காணாமல் போனவர்களை தேடும் பணிகளை நேற்று (03.10.2020) மாலை கடற்படையினரும் சுழியோடிகளும்  முன்னெடுத்து வருகின்றனர்.

 

இது குறித்து மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Advertisement