தற்காலிகமாக மூடப்பட்டது



 (க.கிஷாந்தன்)

 

நோர்வூட் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்று இன்று (07.12.2020) தற்காலிகமாக மூடப்பட்டது.  சுகாதார பாதுகாப்பு நலனைக்கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நோர்வூட் பகுதியில் ஆசிரியையொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

எனவே, இம்மாணவர்களின் பெற்றோர் யாராவது குறித்த தொழிற்சாலையில் பணிபுரிகின்றனரா என்பதனை கண்டறிவதற்காகவும், அவ்வாறு இனங்காணப்பட்டால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவுமே இன்று தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

இன்று மாலை சுகாதார அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் வழமைபோல் தொழிற்சாலை, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

 

குறித்த தொழிற்சாலையில் இதுவரையில் 70 பேர் வரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.