அக்கரைப்பற்று,ஆலையடிவேம்புப் பகுதிகளில்,புதிய தொற்றாளர்கள்

 


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் 12ஆவது நாளாகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதார துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் அக்கரைப்பற்றில் 42 பேரும் ஆலையடிவேம்பில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன். இதுவரையில் கல்முனை பிராந்தியத்தில் 269பேர் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனை அடிப்படையாக கொண்டே சுகாதாரத்துறையினர் விவசாயிகளை வெளியேறாமல் தடுத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசம் வழமைக்கு மாறாக வெறிச்சோடிக்காணப்பட்டுள்ளமை சுட்டிகாட்டப்படுகின்றது.Advertisement