சர்வதேச மகளிர் தினம் 2021

 


சர்வதேச மகளிர் தினம் 2021: உலகெங்கிலும் கொடிகட்டி பறக்கும் பெண்கள்.. ஒரு பார்வை!

அரசியல், சமூகசெயல்பாடுகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில்துறை என சகல துறைகளிலும் இன்று பெண்கள் இல்லாத இடங்கள்.


வருடம்தோறும் மார்ச் 8-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயாக, தாரமாக, அக்கா தங்கையாக, மகளாக, தோழியாக நம் உறவின் அனைத்து நிலையிலும் நிறைந்திருக்கிறார்கள் பெண்கள். எப்போதுமே உடலால் வலிமைமிக்க ஆண்களை விட மனவலிமை நிறைந்த பெண்கள் சிறப்பு மிக்கவர்களே.

அரசியல், சமூகசெயல்பாடுகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில்துறை என சகல துறைகளிலும் இன்று பெண்கள் இல்லாத இடங்களே இல்லை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வது வெறும் பழமொழிக்காக மட்டும்மல்ல. ஆண்கள் துவண்டு போகும் நேரங்களில் தாங்கி பிடித்து நேர்மறை எண்ணங்களை ஆண்கள் மனதில் விதைத்து மீண்டும் வாழ்க்கை என்னும் பந்தயத்தில் முன்பை விட பலமடங்கு வேகத்தில் ஓட வைப்பதில் பெண்களின் பங்கு அதிகம்.