துபாயின் இணை ஆட்சியாளரா் மறைவு


 துபாயின் இணை ஆட்சியாளராகவிருந்த ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.


அவரது சகோதரரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.


ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியமைச்சராகவும் ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் இருந்தார்.


75 வயதான அவர், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அவரது மறைவை அடுத்து, துபாயில் எதிர்வரும் 10 தினங்களுக்கு துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.