பேராசான் சர்வேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்

 


கொழும்பு பல்கலைக்கழகத்தின் தனியார் மற்றும் ஒப்பீட்டுச் சட்டத்துறைப் பேராசிரியராக அருளானந்தம் சர்வேஸ்வரன் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு முன்பே அனைத்து தகைமைகளையும் பெற்றுவிட்டபோதும் தற்போதே அவருக்கு சேரவேண்டிய பதவி வந்துசேர்ந்துள்ள  செய்தி மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது. 


தமிழ் மீதும் தமிழர் நலன் மீதும் பற்றுமிக்கவரான சர்வேஸ்வரன் அவர்கள் பல்கலைக்கழகத்தில் கற்கும் அனைத்து இன ,மொழி ,மதத்தைச் சேர்ந்த மாணவர்களாலும் விரும்பப்படுகின்றமைக்கு அவரது எளிமையும் உதவும் மனப்பான்மையும் தான் முக்கியகாரணமென்றால் மிகையாகாது. 

வாழ்த்துக்கள் சேர்!