புனருத்தானம் தொடர்பிலான மகஜர்களை கையளிக்க நடவடிக்கை


 


வி.சுகிர்தகுமார் 0777113659   

  தம்பிலுவில் ஸ்ரீ காயத்திரி அம்மன் ஆலயத்தை புனரமைக்க ஜனாதிபதி பிரதமர் மற்றும் குறித்த அமைச்சினது உதவியினை பெற்றுத்தருமாறு நீர் வழங்கல் அமைச்சரது இணைப்பாளர் பியசேன கிருத்திகனிடம் ஆலய நிருவாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினையும் கையளித்தனர்.
குறித்த ஆலயத்தின் நிலைமை தொடர்பில் பார்வையிட சென்ற அமைச்சின் இணைப்பாளருக்கு ஆலய நிருவாகத்தினர் ஆலயத்தின் தற்போதைய நிலை தொடர்பில் விளக்கினர்.
கடந்த சில வருடங்களாக குறித்த ஆலயம் எவ்வித நிதியுதவிகளுமின்றி பராமரிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
அத்தோடு பல கட்டடங்கள் திருத்தம் செய்ய வேண்டியதுடன் ஆலய சுற்றுப்புற சூழலும் சுத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே குறித்த ஆலயத்தின் நிலை தொடர்பில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் குறித்த அமைச்சினது கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு ஆலய நிருவாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை நேரில் சென்று கேட்டறிந்து கொண்ட நீர் வழங்கல் அமைச்சரது இணைப்பாளர் பியசேன கிருத்திகன் ஆலய சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஆலய புனருத்தானம் தொடர்பிலான மகஜர்களை பிரதமரிடமும் அமைச்சரிடமும் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மேலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் இன்னும் பலவற்றை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறினார்.