"ஜனாதிபதி அவர்களே, என்னை ஏன் கைது செய்தீர்கள்?” நாடாளுமன்றில் ரிஷாட்


 


தன்னை விசாரணைகள் இன்றி வெறுமனே தடுத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்ற சபையில் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி, விசேட விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்ற சபை அமர்வில் இன்று கலந்துக்கொண்டிருந்தார்.

இங்கு கருத்து தெரிவித்த ரிஷாட்,

என்னை ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கைது செய்தார்கள், 5 நாட்கள் மாத்திரமே என்னிடம் விசாரணைகளை மேற்கொண்டார்கள், இன்றுடன் 102 நாட்கள் நிறைவடைந்துள்ளன.

97 நாட்கள் என்னை தனியறையிலேயே வைத்துள்ளார்கள். 24 மணிநேரமும் அறை மூடியே இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு வழங்கப்பட்ட 2 நிமிட கால அவசாரம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்து சபாநாயகர் ஒலிவாங்கியை நிறுத்திவிட்டு, நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்தார்