தாலிபான்கள் சர்வதேசத்திடம் விடுத்த கோரிக்கை.!


 

ஆப்கானிஸ்தானில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தாலிபான் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

அத்துடன், சர்வதேச சமூகத்துடன் அமைதியான உறவுகளை பேண, அனைத்து நாடுகளுக்கும் தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, ஆப்கானிஸ்தானை விரைவில் இஸ்லாமிய இராஜ்ஜியமாக அறிவிக்கவுள்ளதாக தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 10 நாட்களில், அரச படைகள் பெரும் பின்னடைவை சந்தித்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தமது கட்டுப்பாட்டிற்குள் நேற்று கொண்டுவந்த தாலிபான்கள், நேற்றைய தினமே ஜனாதிபதி மாளிகையையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி, நேற்று நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து பெருமளவிலானோர் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகிவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.